தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருவதையடுத்து திருப்பூர் மாவட்டத்திலும் கடைகளின் இயக்க நேரத்தை மாலை 5 மணியாக குறைத்தும், பல்வேறு செயல்பாடுகளுக்கு தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கொரோனா 2 ஆம் அலை புதிய பாதிப்புகள் 2 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், மீண்டுமாக கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பலவகையான செயல்பாடுகளுக்கு நேர கட்டுப்பாடுகளுடன், சிலவற்றிற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்பொழுது திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இன்று (ஆகஸ்ட் 5) முதல் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் கீழ், பால் மற்றும் மருந்து கடைகள் தவிர மளிகை, காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் சில முக்கிய பகுதியில் இயங்கி வரும் 33 வணிக பகுதிகள், பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் உள்ள 13 வணிக பகுதிகளில் பால், காய்கறி, மளிகை இறைச்சி, கோழி, மீன் கடைகள் தவிர மற்ற அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். டாஸ்மாக் கடைகள் தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பூங்காக்களில் பொதுமக்கள் வருகை தடை செய்யப்படுகிறது. வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் வார இறுதி நாட்களில் மூடப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி. மற்ற உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% வாடிக்கையாளர்கள் உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பார்சல் சேவைகளை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மேற்கொள்ளலாம். மேலும் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்த கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.