தமிழகத்தில் அரசின் உத்தரவின் படி அனைத்து ஆசிரியர்களும் இன்று முதல் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வகுப்புகள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது. தற்போது பரவி வரும் இரண்டாம் கொரோனா அலையால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள போதிலும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளின் பயனாக மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளதால் மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப்பில் இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க அரசு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க கலந்தாலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு அலகுத்தேர்வு நடைபெற உள்ளது.
அனைத்து ஆசிரியர்களும் இன்று (ஆகஸ்ட் 2) முதல் கட்டாயம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி 4 மாத காலத்திற்குப் பின் அனைத்து ஆசிரியர்களும் இன்று பணிக்கு வருகை புரிந்துள்ளனர். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பதிவேடுகளை பராமரித்தல், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குதல், அலுவலக பணிகள் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னேற்பாடுகள் தீவிரமடைவதால் விரைவில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.