இந்தியாவில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,072 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,24,49,306 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,33,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 44,157 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,80,626 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 389 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,34,756 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போது மெல்ல குறைந்து வரும் நிலையில் கொரோனாவின் 3-வது அலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை எப்போது உச்சமடையும் என்பது குறித்த அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு பிரதமர் அலுவலகத்திடம் சர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.