தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் இருந்ததை விட குறைவான அளவு மட்டுமே மின்தடை செய்யப்படுகிறது, என்றும் விரைவில் தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் மின் பராமரிப்பு பணிகள் 9 மாதங்களாக சீரமைக்காமல் இருந்தது. இதனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலம் முழுவதும் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேரங்களில் மின்தடை செய்யப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் கூடுதலாக மின்தடை செய்யப்படுவது போல் சித்தரிக்கிறது. இன்று சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜி தலைமையில், தலைமை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த ஆட்சி காலத்தில் குறைந்த மின் அழுத்த பிரச்சினைக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 3,000 அதிகமான இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது. இவை 3 , 4 மதங்களுக்குள் சரி செய்யப்பட்டு விடும். ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் தொடர்பாக புகார் அளித்த 14,69,000 பேர்களின் குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. மின்கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் தவறு செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆட்சியை விட தற்போது மின் தடை காலம் 1000 நிமிடங்கள் குறைந்துள்ளது. கடந்த ஆட்சியில் மின் மிகையாக இருந்தால் நிலுவையில் உள்ள புதிய இணைப்பு பட்டியலில் உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு இணைப்பு வழங்கி இருக்கலாம். மின் தடை குறைக்கப்பட்டு சீரான மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கும் முறை விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.