மல்யுத்தத்தில் அபாரம்; வெள்ளிப்பதக்கம் வென்று ரவிகுமார் சாதனை
ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற பைனலில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 13வது நாளான இன்று (ஆக.,05) மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் கீழ் விளையாடும் ஜவுர் உகுவேவை எதிர்கொண்டார். இதில் இறுதிவரை போராடிய ரவிகுமார் 4-7 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். இதனையடுத்து பைனலில் தோற்றதால் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் சுஷில்குமாருக்கு (2012 ஒலிம்பிக்) அடுத்ததாக வெள்ளி வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை ரவிகுமார் படைத்துள்ளார். இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இந்தியா இதுவரை மொத்தம் 2 வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.