தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும். அது நிறைவு பெற்றவுடன் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி பாதிப்படையாத வகையில் பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு கற்றல் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் தொற்று கட்டுக்குள் வந்துள்ளமையால் செப்டம்பர் 1 தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனால் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வெகுநாளாக வீட்டில் இருந்து மீண்டும் பள்ளிக்கு வருவதால் அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் போக்கும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
அதனை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அடிப்படை இணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்னுரிமை பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். பாடங்களின் அடிப்படையில் புத்தாக்க பயிற்சி 45 முதல் 60 நாட்களுக்கு கற்று தரப்படும். இந்த பயிற்சி நிறைவு பெற்றவுடன் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.