வெண்டைக்காய் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள்!!
குறிப்பாக குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும். ஞாபகசக்தி வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான்.
மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.
நீரிழிவு நோய் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
புற்று நோய் நமது உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காய் கொண்டுள்ளது. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.
கொலஸ்ட்ரால் உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு உயராது.
*நன்றி வணக்கம்*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.