தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டங்கள் குறைப்பு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், மாநில அரசின் வாரிய தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன
இந்நிலையில் பள்ளிகள் திறப்பதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்படுகிறது. எழுதுக இயக்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. அதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது 3 மாநிலங்களில் பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு தாமதம் ஆவதால், பாடத்திட்டத்தை குறைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி 12 ஆம் வகுப்பு தனித்தேர்வுகள் நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.