1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை!

தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை!

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக எம்டிஎஸ் உள்ளிட்ட 15 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு மீன்வளத் துறை

மொத்த காலியிடங்கள்: 15

பணி: State Programme Manager - 01

சம்பளம்: மாதம் ரூ.70,000





தகுதி:  மீன்வள அறிவியல், விலங்கியல், கடல்சார் உயிரி அறிவியல், மீன்வளத்தில் முதுநிலை பொருளாதாரம், தொழில்துறை மீன்வளம், மீன்வள வணிக மேலாண்மை போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 
பணி : State Data cum MIS Manager - 01

சம்பளம்: மாதம் ரூ.50,000

தகுதி: புள்ளியியல், கணிதம், மீன்வள பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
பணி சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff - 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: District Programme Manager - 12

சம்பளம்: மாதம் ரூ.45,000

தகுதி: புள்ளியியல், கணிதம், மீன்வள பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்https://www.fisheries.tn.gov.in என்ற அதிகாப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Commissioner of Fisheries and Fishermen welfare,
3rd floor, Integrated Office Building for Animal
Husbandry and Fisheries Department,
No.571, Anna salai, Nandanam,
Chennai - 600 035.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in அல்லது https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/PMMSY_SPU_DPU_Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags