1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

20ம் நூற்றாண்டின் வரலாற்றை மாற்றி அமைத்த ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் பிறந்த தினம்.

#இன்று ஏப்ரல் 20,1889


20ம் நூற்றாண்டின் வரலாற்றை மாற்றி அமைத்த ஜெர்மானிய சர்வாதிகாரி
#ஹிட்லர் பிறந்த தினம்..

உலகில் யாரும் 100 சதவீதம் நல்லவர்களும் இல்லை; 100 சதவீதம் கெட்டவர்களும் இல்லை.

உலகமே கொடுங்கோலனாக நினைக்கும் #ஹிட்லர் தான் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடிப்படையானவர். பின்னாளில் அவர் நடத்திய கொடுங்கோல் ஆட்சி காரணமாக அவரது சாதனைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

ஹிட்லரின் ஆரம்பக்கால சாதனைகளை பார்த்தால் ஜெர்மனியின் சரித்திரத்தில் தோன்றிய மிகச்சிறந்த மாமனிதராகவே இருந்தார்.

முதலாம் உலகப்போர் முடிந்திருந்த காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. மக்களை வறுமை வாட்டியெடுத்தது.

இதை மூன்றே வருடங்களில் சரி செய்தவர், ஹிட்லர். 1933-ல் ஹிட்லர் '#சான்சலர்' பதவியை ஏற்றபோது 60 லட்சம் மக்கள் வேலை இல்லாமல் இருந்தார்கள்.

1936-ல் ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர்கூட இல்லை. இத்தனைக்கும் ஹிட்லருக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. அவரது அமைச்சரான #ஜால்மர்_ஷ்ஹாக்ட் என்பவர்தான் ஜெர்மனியை அடியோடு மாற்றிக் காட்டினார்.

ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் சரியாக நிர்ணயிக்கப்பட்டது. வாகனங்கள் வேகமாக செல்ல நீண்ட சாலைகளை உலகில் முதன்முதலாக அமைத்தவர் ஹிட்லர்தான். இன்றைய நமது நான்கு வழிச்சாலை அறிமுகப்படுத்தியவர் ஹிட்லர்தான்.

முதியவர்களுக்கு #பென்ஷன், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் #இலவசமருத்துவம், எல்லோருக்கும் #மருத்துவகாப்பீடு என்று வரிசையாக ஹிட்லர் அறிவித்த ஒவ்வொன்றும் மிகப் பெரிய #புரட்சி_திட்டங்கள்.

போர்ஷ் கார் நிறுவன அதிபர் பெர்டினான்ட் போர்ஷை அழைத்து சாமானியர்களும் வாங்கும் விலையில் கார் தயாரிக்குமாறும், அது ஒரு காலன் பெட்ரோலுக்கு 40 மைல் செல்ல வேண்டும் என்றும் கூறினார். பின்பகுதியில் என்ஜின் வைத்து தயாரிக்கப்பட்ட அந்த சிறிய காருக்கு '#போக்ஸ்வேகன்' என்று பெயரிட்டார். இன்று அந்தக் கார்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது.

தொழிற்சாலைகளால் #சுற்றுச்சூழல் பாதிக்கப்பபடக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தவர். அதற்கென சட்டமும் கொண்டுவந்தார். அன்றைய தொழிற்சாலைகளும் அதற்கான சாதனங்களை போருத்திக்கொண்டன. அன்று #ஜெர்மனியில் #ஓடிய_நதிகள் அனைத்தும் சுத்தமாக இருந்தன.

ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்சாலையிலும் சம்பள பிரச்சனை, வேலை நிறுத்தம் கிடையாது. #முதலாளிகள் பக்கமும் சாயாமல், #தொழிலாளர்கள் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். பிரச்சனை ஏற்படுத்துபவர்கள் முதலாளியாக இருந்தாலும் தொளிலளியாக் இருந்தாலும் சிறையில் தள்ளினார்.

ஹிட்லர் ஆட்சி ஏற்ற போது #ஜெர்மனி ராணுவத்தில் ஒரு லட்சம் வீரர்கள் இருந்தனர். அவர்களிடம் நவீனரக துப்பாக்கிகள் கிடையாது. நான்கே ஆடுகளில் நவீன போர் விமானங்கள், #பீரங்கிகள், #துப்பாக்கிகள், #டாங்கிகள் கொண்ட ஐரோப்பாவில் மிக சக்தி வாய்ந்த இராணுவமாக மாற்றினர்.

ஹிட்லரின் 12 வருட ஆட்சியில் முதல் 5 வருடமும் அவர் செய்த சாதனைகள், உலக பொருளாதார மேதைகளை வியப்பில் ஆழ்த்தின.

ஆனால், அதன்பின்னர் நிகழ்ந்தவை ஹிட்லர் வரலாற்றை புரட்டி போட்டது.  சாதனைகள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டுவிட்டன என்பதே நிதர்சனம்!!
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags