1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தினமும் பயன்படுத்தப்படும் இரட்டை சொற்களும் அவற்றின் அர்த்தங்களும்

குண்டக்க மண்டக்க.* 

குண்டக்க-இடுப்புப்பகுதி.மண்டக்க-தலைப்பகுதி.
சிறுவர்கள் கால்பக்கம்,தலைப்பக்கம்
பார்க்காமல் தூங்குவார்கள்.
அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி,
மாறி இருத்தலே
குண்டக்க மண்டக்க என்பதற்கு பொருள்.
*அந்தி சந்தி.*
அந்தி_மாலைக்கும்
இரவுக்கும் இடையில்உள்ள பொழுது.
சந்தி_இரவுக்கும் காலைக்கும்
இடையில் உள்ள விடியல் பொழுது.
*அக்குவேர் ஆணிவேர்*
அக்குவேர்_செடியின் கீழ் உள்ள
மெல்லியவேர்.
ஆணிவேர்_செடியின் கீழ் ஆழமாக
செல்லும் உறுதியான வேர்.
*அரை குறை*
அரை-ஒரு பொருளில் சரிபாதி அளவு.
குறை-அந்த சரிபாதியளவில்
குறைவாக உள்ளது குறை.
(உ-ம்.)அரை குறை வேலை.
*அக்கம்பக்கம்.*
அக்கம்-தன்வீடும்,தான்இருக்கும் இடமும்.
பக்கம்-பக்கத்துவீடும் பக்கத்தில் உள்ள இடமும்.
*கார சாரம்*
காரம்-உறைப்புச்சுவை.
சாரம்-சார்ந்தது.(காரம்
சார்ந்த பிற சுவைகள்)
*இசகுபிசகு.*
இசகு-தம் இயல்பு
தெரிந்து,ஏமாற்றுபவனிடம்
ஏமாறுதல்.
பிசகு-தம்முடைய
அறியாமையால் ஏமாறுதல்.
(உ-ம் )இசகு பிசகாக மாட்டிக்கொண்டார்.
*இடக்கு முடக்கு*
இடக்கு--எள்ளி நகைத்தும்,
இகழ்ந்தும் பேசுதல்.
முடக்கு--கடுமையாக எதிர்த்தும்,
தடுத்தும் பேசுதல்.
*ஆட்ட பாட்டம்*
ஆட்டம்--தாளத்திற்குப் பொருந்தியோ/பொருந்தாமலோ ஆடுவது.
பாட்டம்--ஆட்டத்திற்குப்
பொருந்தியோ/பொருந்தாமலோ
பாடுவது.
*அலுப்பு சலிப்பு*
அலுப்பு-உடலில் உண்டாகும் வலியும்
குடைச்சலும்.
சலிப்பு-உள்ளத்தில் ஏற்படும்
வெறுப்பும் சோர்வும்.
*1.தோட்டம் துரவு.*
*2.தோப்பு துரவு.*
தோட்டம் -செடி,கொடி கீரை பயிரிடப்படும் இடம்.தோப்பு-மரங்களின் தொகுப்பு.
துரவு--கிணறு
*காடு கரை.*
காடு-மேட்டுநிலம்
(முல்லை).
கரை-வயல் நிலம்(மருதம்-
நன்செய்,புன்செய்)
*காவும் கழனியும்.*
கா--சோலை.
கழனி--வயல்.
(மருதம் சார்ந்த நிலப்பகுதி)
*நத்தம் புறம்போக்கு.*
நத்தம்--ஊருக்குப் பொதுவாகிய
மந்தை.(ஊருக்குப் பக்கத்தில் இருக்கும்)
புறம்போக்கு--ஆடு மாடு மேய்வதற்காக அரசு
ஒதுக்கிய புல்நிலம்.(ஊர் கடந்து தூரத்தில் இருக்கும்.)
*பழக்க வழக்கம்.*
பழக்கம்--ஒருவர் ஒரு
செயலைப் பலகாலம்
செய்து வருவது.
வழக்கம்--பலர் ஒரு செயலைப்
பலகாலம் கடைபிடித்து வருவது.(மரபு)
*சத்திரம் சாவடி.*
சத்திரம்--இலவசமாக சோறு போடும் இடம்(விடுதி).
சாவடி--இலவசமாக தங்கும் இடம்(விடுதி).
*நொண்டி நொடம்.*
நொண்டி--காலில் அடிப்பட்டோ அல்லது அடிபடாமலோ ,ஒரு குறையால் நொண்டி நடப்பவர்.
நொடம்--கை முடங்கி,அதனால் கையின் செயல் அற்றவர்(நுடம்,முடம்)
*பற்று பாசம்.*
பற்று--நெருக்கமாக உறவாடி இருத்தல்.
பாசம்--பிரிவில்லாமல்
சேர்ந்தே இருத்தல்.
*ஏட்டிக்குப் போட்டி.*
ஏட்டி-விரும்பும் பொருள் அல்லது செயல்.
(ஏடம்--விருப்பம்.)
போட்டி--விரும்பும் பொருள் அல்லது
செயலுக்கு எதிராக வரும் ஒன்று.
*கிண்டலும் கேலியும்.*
கிண்டல்--ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே
பிடுங்குதல்.(கிண்டி தெரிந்து கொள்ளுதல்).
கேலி--எள்ளி நகையாடுதல்.
*ஒட்டு உறவு.*
ஒட்டு--இரத்தச்சம்பந்தம் உடையவர்கள்.(தாய்,தந்தை,
உடன்பிறந்தவர்கள்,மக்கள்)
உறவு--பெண் கொடுத்த அல்லது
பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள்.
*பட்டி தொட்டி.*
பட்டி---மிகுதியாக
ஆடுகள் வளர்க்கப்படும் இடம்(ஊர்).
தொட்டி---மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம்(ஊர்).
*கடை கண்ணி.*
கடை---தனித்தனியாக அமைந்த வியாபார(வணிக)நிலையம்.
கண்ணி-----தொடர்ச்சியாக கடைகள் அமைந்த
கடைவீதி.
*பேரும் புகழும்.*
பேர்--வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்.
புகழ்--வாழ்விற்குப் பிறகும்
நிலைப்பெற்றிருக்கும் பெருமை.
*நேரம் காலம்.*
நேரம்--ஒரு செயலைச்
செய்வதற்கு நமக்கு வசதியாக
(Time) அமைந்த பொழுது.
காலம்--ஒரு செயலைச்
செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில்
எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை.
*பழி பாவம்.*
பழி---நமக்கு தேவையில்லாத,
பொருந்தாத செயலைச்
செய்ததால்,இப்பிறப்பில்
உண்டாகும் பழிப்பு.
பாவம்---தீயசெயல்களைச்
செய்ததால் மறுபிறப்பில்
நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள்.
*கூச்சலும் குழப்பமும்.*
கூச்சல்--துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும்
அவல ஒலி (ஓலம்).
கூ--கூவுதல்.
----
குழப்பம் --அவல ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல்..
*நகை நட்டு.*
நகை--பெரிய அணிகலங்களைக்
குறிக்கும்.(அட்டியல்,ஒட்டியாணம்,சங்கிலி).
நட்டு---சிறிய அணிகலன்களைக்குறிக்கும்.
(திருகு உள்ள தோடு,காப்பு,கொப்பு).
*பிள்ளை குட்டி.*
பிள்ளை--(பொதுப்பெயர்)
இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்.
குட்டி---இது பெண் குழந்தையைக்
குறிக்கும்.
*பங்கு பாகம்*
பங்கு--கையிருப்பு பணம்,நகை,பாத்திரங்களைப்பிரித்தல்.(அசையும் சொத்து)
பாகம்--வீடு,மனை,நிலபுலன்களைப் பிரித்தல்,(அசையா சொத்து)
*வாட்ட சாட்டம்.*
வாட்டம்-வளமான தோற்றம்,வாளிப்பான உடல் ,
அதற்கேற்ப உயரம்.
சாட்டம்--உடல்(சட்டகம்),வளமுள்ள கனம்.
தோற்றப் பொலிவு.
*காய்கறி.*
காய்---காய்களின் வகைகள்.
கறி--
(சைவ உணவில் )கறிக்கு உபயோகப்
படுத்தப்படும் கிழங்கு வகைகளும்,கீரை வகைகளும்.
*கால்வாய்-வாய்க்கால்*
வாய்--குளம்.
கால்வாய்--குளத்திற்கு
தண்ணீர் வரும் கால்.(பாதை).
வாய்க்கால்--குளத்திலிருந்து
தண்ணீர் செல்லும் கால்.(பாதை)
பாதை என்பது நீர்வழிப்பாதையைக்குறிக்கும்.
*ஈவு இரக்கம்.*
ஈவு--(ஈதல்).கொடை வழங்குதல்.
இரக்கம்---(அருள்).
பிற உயிர்களின்மேல்
அருள் புரிதல்.
*பொய்யும் புரட்டும்.*
பொய்---உண்மை இல்லாததைக்கூறுவது.
புரட்டு-- ஒன்றை நேருக்கு மாறாக
மாற்றி ,உண்மைபோல் நம்பும்படியாக கூறுவது.
*சூடு சொரணை.*
சூடு--ஒருவர் தகாத சொல்லைப்
பேசும்போது/தகாத செயலைச்செய்யும் போது நமக்கு ஏற்படும்
மனக்கொதிப்பு(மனவெதுப்பு,எரிச்சல்).
சொரணை--நமக்கு ஏற்படும் மான உணர்வு.
*பட்டம், விருது.*
பட்டம்-- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றல் படித்து பெறுவது.
பெயருக்குப் பின்னால்‌ இடம் பெறும்.
விருது--தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது.இது
பெயருக்கு முன்னால் இடம்பெறும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags