பார்லி என்கிற பொருளே
உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை.
முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி
பார்லி அரிசியில் பல வகையான சத்துப் பொருள்களும், சர்க்கரையும் அடங்கியுள்ளது.
ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது.
பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக் கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான “டெக்ஸ்ட்ரின்” என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன.
கஞ்சி தயார் செய்ய பார்லி அரிசியைக் கொதிக்க வைக்கும் போது இந்தச் சத்துக்கள் கரைந்து ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன.
பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சுங்கள்.
தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன் அந்தக் கஞ்சியுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டால், நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனத்தைத் தரும், உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சியையும் குணமாக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலைப்(எல்.டி.எல்) போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது.
பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.
பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும்.
தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக்கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும்.
இதய நோயாளிகளுக்கு பார்லி அற்பு தமான ஒரு உணவு.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது.
பார்லியில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது.
இந்த பீட்டா க்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
நம் உடலிலுள்ள நிணநீர் சுரப்பிகள்தான், உடலின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்குக் காரணம்.
அது அடைக்கப்பட்டால் உடலில் தண்ணீர் தேங்கிவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் இந்த நிணநீர் சுரப்பிகள் அடைபடுவதால், தேங்கிய நீர்ச்சத்தை வெளியேற்ற பார்லி கொடுக்கப்படுகிறது.
கோதுமையிலும், ஓட்ஸிலும் நார்ச்சத்து இருந்த போதிலும் தயாரிக்கும் பொழுது அவைகளிடத்திலிருக்கும் நார்ச்சத்து ஓரளவு குறைந்து போகின்றன.
ஆனால், பார்லியில் பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை. இதுதான் பார்லியின் சிறப்புக் காரணம்.
இது உடம்பில் இருக்கிற சர்க்கரையின் அளவைக் குறைக்கும். பார்லியில் இருக்கும் நார்ச்சத்து சக்திமிக்கது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.