சப்பாத்தி குறிப்புகள் :
சப்பாத்தி செய்வதில் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் படித்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒரு சப்பாத்திக்கு இத்தனை விஷயங்களா என்று,,,
சப்பாத்தி சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளுக்கு சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் கொடுத்துப் பாருங்கள்.
எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இறுக்கமாக இருக்கிறதா, சப்பாத்தி மாவுடன் இரண்டு வாழைப்பழங்களை சேர்த்து பிசைந்து பாருங்கள்.
குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் பூரி போல் உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.
பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி வெகு நேரம் மொரு மொருப்பாக இருக்கும்.
பூரி, சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.
சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள். கருப்பாக காய்ந்து போகும் தன்மை ஏற்படாது.
சப்பாத்தி சுடும்போது கல் சூடானதும் ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டால் மெத்தென வரும்.
சப்பாத்தி மாவுடன் வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் வடநாட்டுக்காரர்கள் செய்யும் சப்பாத்தியின் அதே சுவை கிட்டும்.
சப்பாத்திக்கு திரட்டும் போது மாவை தொட்டு சப்பாத்தி திரட்டுவார்கள். மேலும் எண்ணெய் ஊற்றி திரட்டினால் சப்பாத்தி சுடும்போது அதிக எண்ணெய் ஊற்றத் தேவையில்லை.
சப்பாத்தியை நன்கு பேப்பர் போல் திரட்டி அதன் மேல் எண்ணெய் உற்றி அதனை நான்காக மூடி மீண்டும் ஒரு முறை திரட்டி எடுத்து தோசைக் கல்லில் போடுங்கள். சப்பாத்தி எப்படி உப்புகிறது என்று தெரியும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் ஊற்றினால் சுவை அதிகரிக்கும்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.