அட்சய திருதியை:
உப்பு மஞ்சள் வாங்குங்க
உணவு தானம் கொடுங்க புண்ணியம் பெருகும்
#அட்சயம் என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு வளரும் என்பது நம்பிக்கை. அன்று தானங்கள் செய்து புண்ணியத்தை வாங்குவது தான் மிகவும் சிறப்பு. அதனால் அட்சய திருதியை நாளில் தானம் கொடுத்து பல தலைமுறைக்கும் அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை சேர்த்து வைப்போம். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபட்டால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
இறைவன் அருள் கிடைக்கும்
வனவாச காலத்தில், சூரியப் பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தானாம். ஏழையாகப் பிறந்த குசேலன், தன் நண்பன் கிருஷ்ண பரமாத்மாவைக் கண்டு செல்வம் பெற்றது இந்த நாளில்தான். இன்றைய தினத்தில் வீட்டில் கிருஷ்ணர் சிலையோ படமோ இருந்தால் அவல் படைத்து பூஜை செய்தால் அன்னை மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும்.
அத்தியாவசிய பொருட்கள்
சித்திரை மாதம் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் திருதியை. இது சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளாக போற்றப்படுகிறது. இந்த நாளில் என்ன பொருட்கள் வாங்கினாலும் பெருகும் என்ற நம்பிக்கையில் தங்கம் வாங்குகிறார்கள். மக்களின் நம்பிக்கை மூலதனமாக வைத்து நகைக்கடைகள் பல கோடி ரூபாய்க்கு தங்கத்தை விற்பனை செய்கின்றனர். இப்போது உள்ள சூழ்நிலையில் பலருக்கும் தங்கம் என்பது அநாவசியம் ஆடம்பரம்தான். வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள், அரிசி, மஞ்சள், உப்பு போன்றவைகளை அட்சய திருதியை நாட்களில் வாங்கலாம்.
புண்ணியம் பெருகும்
வற்றாத கடலில் இருந்து பெறப்படுகிற, எப்போதும் வீட்டில் இருப்பு வைத்திருக்கக்கூடிய உப்பைத் தானம் செய்வது நல்லது. உப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாகக் கொடுத்துவிட்டு, லஷ்மி பூஜை செய்தால் புண்ணியம் கிடைக்கும்.
அகால மரணம் தடுக்கலாம்
அட்சய திருதியை நாளில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும். முக்கியமாக தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். ஏழைகளுக்கு தயிர்சாதம் தானம் தருவதால் 11 தலைமுறைக்கும் குறைவில்லா அன்பை கிடைக்கச் செய்யும் வளமான வாழ்வு அமையும்.
பித்ரு தர்ப்பணம்
பசுவிற்கு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும். அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும். நோய்கள் நீங்கி ஆரோக்கியத்துடன வாழ அட்சய திருதியை நாளில் இறைவனை வேண்டுவோம்

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.