தனிநபர்கள் ஜூம் (ZOOM) இணையவழி சந்திப்புத் தளத்தை,
பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் ஒருங்கிணைப்பு மையம் Cyber Coordination Centre (CyCord), அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அலுவலக நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய தளம் இதுவல்ல என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் ஆவணம், இந்திய கணிப்பொறி அவசரகால மறுமொழி குழு Indian Computer Emergency Response Team(Cert-In) வெளியிட்ட முந்தைய அறிவுரைகளைக் குறிப்பிட்டிருப்பதோடு, ஜூம் (ZOOM) பாதுகாப்பான தளம் அல்ல என்றும் கூறியுள்ளது. தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக, இந்தத் தளத்தைப் பயன்படுத்த விரும்பும், தனி நபர்களுக்கு, பாதுகாப்பு அளிப்பதற்காக விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜூம் (ZOOM) மாநாட்டு அறையில் அங்கீகாரம் இல்லாத எவரும் நுழைந்து விடுவதைத் தடுப்பது, அங்கீகாரம் இல்லாமல் பங்கேற்கும் நபர், மாநாட்டைப் பயன்படுத்தும் மற்ற பங்கேற்பாளர்களின் டெர்மினல்களைப் பாதிக்கக் கூடிய செயல்களைச் செய்யாமல் தடுப்பது ஆகியவை, இந்த அறிவுரை வழங்கப்பட்டதற்கான பரந்த நோக்கமாகும்.
தனிநபர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் குறித்து, இந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.