1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஓரெழுத்து ஒரு மொழிச்சொற்கள்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247,
இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு, அழகு, சிவன், திருமால், திப்பிலி
ஆ -----> பசு, ஆன்மா, ஆச்சா மரம், ஞானம், இச்சை, வரையாடு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி, திருமகள்
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி, உணவு, திங்கள், சிவன்
ஏ -----> அம்பு, இறுமாப்பு, சிவன், திருமால்
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, ஆசிரியர், அழகு, பருந்து
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை, ஒளிவு
கா -----> சோலை, காத்தல், காகம், காவடி, பூந்தோட்டம், வலிமை
கூ -----> பூமி, கூவுதல், கூக்குரல், அழுக்கு, பிசாசு
கை -----> கரம், உறுப்பு, ஒழுக்கம், சிறிய, திங்கள்
கோ -----> அரசன், தலைவன், இறைவன், பசு, இடியோசை, ரோமம்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல், பெண்
சீ -----> இகழ்ச்சி, திருமகள், உறக்கம்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில், பாதுகாப்பு, ஒலி, அரசன்
தா -----> கொடு, கேட்பது, அழிவு, குற்றம், பகை, நான்முகன்
தீ -----> நெருப்பு, அறிவு, இனிமை, சினம். நஞ்சு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை, பறவையின் இறகு, சதை
தே -----> நாயகன், தெய்வம், அருள், தேடு
தை -----> மாதம், தையல்
நா -----> நாக்கு, சொல், நான்
நீ -----> நின்னை, தள்ளு
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல், இகழ்ச்சி, நோய்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோய், நோவு, வருத்தம், வலி
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு, பாம்பு
பூ -----> மலர், அழகு, தாமரை, பூமி, இடம்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு, அம்மா
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள், குற்றம், மேகம்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம், வினா, ஐயம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags