கொரோனா வைரஸ் பெரும் தொற்றால்
ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்ய, பணியாளர் தேர்வு ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்ய, பணியாளர் தேர்வு ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
சமுக இடைவெளி விதிமுறைகள் உட்பட தற்போதுள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ள தேர்வுகளின் தேதிகளை அவ்வப்போது ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு (அடுக்கு 1) 2019, இளநிலை பொறியாளர் (முதல் தாள்) தேர்வு, 2019, சுருக்கெழுத்தாளர் நிலை 'சி' மற்றும் 'டி' தேர்வு, 2019 மற்றும் ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு, 2018 ஆகியவற்றுக்கான மீதமுள்ள தேர்வு நாட்களுக்கான புதிய தேதிகள், பொது முடக்கத்தின் இரண்டாம் கட்டம் மே 3 தேதி அன்று முடிவுக்கு வந்தவுடன் முடிவு செய்யப்படும்.
இந்த தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட தேதிகள், ஆணையம் மற்றும் ஆணையத்தின் பிராந்திய / துணை பிராந்திய அலுவலகங்களின் வலைதளங்களில் அறிவிக்கப்படும். ஆணையத்தால் வெளியிடப்பட்ட வருடாந்திர தேர்வு நாள்காட்டியும், இதர தேர்வுகளின் அட்டவணைகளைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்யப்படும்.
மேலும், பணியாளர் தேர்வு ஆணையத்தின் அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிலை பிரதமர் பாதுகாப்பு நிதியத்துக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.