1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

இரத்த அழுத்தம் குறைய எளிய மருத்துவக் குறிப்புகள்

இரத்த அழுத்தம் குறைய எளிய மருத்துவக் குறிப்புகள்...



 தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4  வெள்ளைப் பூண்டுப் பற்களை சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.

 முள்ளங்கியில் பொட்டாசியம்  அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால்  முள்ளங்கி இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.

 அதிகம் சத்தம் போட்டுப் பேசுவதை நிறுத்திவிட வேண்டும்.

 இரத்த அழுத்தம் குறைய தினமும்  ஒரு வாழைப் பழம் சாப்பிடுவது நல்லது.

 உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம்,
நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது.

 தினமும் 45 நிமிடம்  நடைப் பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.

 உணவில்  குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
 தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.

 எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும்.

 உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். 
 தினமும் உணவில் கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

 தினமும் யோகா மற்றும் தியானம் செய்து வந்தால் இரத்த அழுத்தம் பெருமளவு குறையும்.

 அளவுக்கதிகமாக உள்ள உடற்பருமனைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

 புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை நிறுத்துவதனால் இரத்த அழுத்தம் குறையும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags