1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பழமொழிக்கு சரியான பொருள் சொல்வோம்.

பாதை மாறிய பழமொழிகள் II

😡--> இன்றைய பழமொழி.
🥰--> சரியான பழமொழி

😡அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்.

🥰அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.

பொருள்: தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்து வரும் மனிதன், யாசகன் கேட்பவன் அர்த்த ராத்திரியில வந்தாலும் கொடை கொடுப்பானாம்.
யோசிக்க: அற்பனா இருப்பவன் எப்படி தானதர்மம் செய்வான்?

😡ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்.

🥰ஆயிரம் வேரை (மூலிகை வேரை) கொன்றவன் அரை வைத்தியன்.

பொருள்: சித்த வைத்திய முறைகளில் மூலிகைகளை தெரிந்து வைக்கிறது மிக அவசியம். குறைத்தது ஆயிரம் மூலிகைகளின் தன்மை அறிந்தவனே அரை வைத்தியன். 
யோசிக்க: பின்ன ஆயிரம் பேர கொன்ன சும்மாவ விடுவாங்க.

😡களவும் கற்று மற.

🥰களவும் கத்தும் மற.

பொருள்: கத்து என்பது தூய தமிழில் "பொய்" அல்லது "கயமை" என்பதாய் பொருள். திருடுறதையும், ஏமாற்றுவதையும் மறக்க வேண்டும். கற்றுக்கொள்வதை அல்ல.
யோசிக்க: நாம் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டதை மறக்க சொல்லலாமா?

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.

🥰அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்.

பொருள்: அகத்துலனு சொன்னது ஆத்துலனு மாறிவிட்டது. அகத்தில் அதாவது மனதில் போகிற வருகிறவர் போகிறவர் சொன்னதையெல்லாம் போட்டு குழம்பாம, தேவையானதை மட்டும் அறிந்து கொண்டு சேர்த்து வச்சா போதும்.
யோசிக்க: ஆத்துல அதாவது குளத்துல எதுக்குங்க கண்டதை போடனும். அசுத்தமாக்கவா? இதுல அளந்து வேற..

😡வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.

🥰வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை.

பொருள்: வாக்கு(கற்றல் அறிவு) என்றால் தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு புரியும்படி  கற்பிப்பவருக்கு வாத்தியார் வேலை. போக்கு  என்றால் ஊர் நடத்தை கற்றறிந்தவருக்கு போலீஸ் வேலை உகந்தது என்று தான் சொன்னார்கள். 
யோசிக்க: வக்கு இல்லாதவன், போக்கிரிக்கும் எப்படிங்க வேலை கொடுப்பாங்க?

இனிமேலும் நாம் சரியான பழமொழியை சொல்வோம். மற்றவருக்கும் எடுத்துரைப்போம்!
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags