பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு, மார்ச், 24ல் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம், மே மாதம் துவங்கி, ஜூனில் முடிந்தது.மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பின், அவை அனைத்தும், அரசு தேர்வு துறையால் சேகரிக்கப்பட்டு, மாநில அளவில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் போது, மாணவர்களுக்கான மதிப்பெண்களை, கூட்டல் பிழையின்றி, சரிபார்த்து வெளியிடுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிவுகளை வெளியிடும் போது, மதிப்பெண்கள் தவறாக குறிப்பிடப்பட்டு, பல மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு பணம் செலுத்தி, விண்ணப்பித்த பின்பே, இந்த பிழைகள் சரி செய்யப்படுகின்றன.எனவே, இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ள நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண்களை பிழைகள் இன்றி, பலமுறை சரிபார்த்த பின் வெளியிட வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.