பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகளை விமர்சித்து , பேட்டி அளிக்கக்கூடாது ' என , இரண்டு வாரங்களுக்கு முன் , ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு இருந்தார் .
இந்நிலையில் , 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்பாகவும் , ' கிரேடு ' முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு , பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் , ' மெமோ ' அனுப்பியுள்ளார் .
அரசின் உத்தரவை மீறியும் , அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறியும் செயல்பட்டதாக கூறி , 15 நாட்களுக்கு விளக்கம் அளிக்க , பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இந்த நடவடிக்கைக்கு , இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள் 17B நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தீர்மானம் இயற்றியுள்ளனர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.