பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
'புதிய மென்பொருளான 'ஐஎப்எச்ஆர்எம்எஸ்' மூலம் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் சம்பளப் பட்டியலைத் தயாரித்து அரசுக் கருவூலத்திடம் சமர்ப்பிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை, திருநெல்வேலி, திருவாரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதத்தின் ஊதியப் பட்டியல் ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த முறையில் தருமபுரி, பெரம்பலூா், நாமக்கல், திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பட்டியல் தயாரிக்கக் கருவூலத் துறை திட்டமிட்டுள்ளது. எனவே, முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஐஎப்எச்ஆர்எம்எஸ் மென்பொருளில் பதிவு செய்து ஜூலை மாத ஊதியப் பட்டியலை கருவூலங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாவட்டம் சார்ந்த கருவூலகத்தை அதிகாரிகள் தொடர்பு கொள்ளலாம்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.