நீட், ஜேஇஇ தேர்வுகளைத் தள்ளிவைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்டிஏவிடம் ஆலோசனை கேட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற இருந்தது.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சுமார் 15 லட்சம் பேர் நீட் தேர்வுக்கும் 9 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இந்த நேரத்தில் போட்டித் தேர்வுகளை நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதனால், கரோனா பாதிப்பு குறையும் வரை தேர்வுகளை நடத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் #PostponeneetJee, #NoExamsInCovid, #HealthOverNEETjee உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமையிடம் (என்டிஏ) தேர்வு குறித்து ஆலோசனை கேட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறும்போது, ''தற்போதைய சூழல் மற்றும் மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது குறித்து என்டிஏ மற்றும் பிற நிபுணர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. நாளை அவர்கள் இது தொடர்பான பரிந்துரைகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளிப்பர்'' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.