அரசு போக்குவரத்துக்கு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இந்த திட்டத்தை அமல்படுத்த போக்குவரத்துக்கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திட்டம் மூலம் பயன்பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை, தொகையை கணக்கிட்டு உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
இதனிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003ம் ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் வகுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்துக்கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.