மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர் சங்கம் மனு
பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு நடத்த வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் இளமாறன் தலைமையில் நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனு:கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்து, தமிழகத்திற்கு தனி கல்வி கொள்கையை உருவாக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இலவசமாக்கப்பட வேண்டும்.அரசு பள்ளிகளில், போதிய கழிப்பறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
நிரந்தர துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், நிரந்தரமாக குமாஸ்தா, இரவு காவலர்களை பணியமர்த்த வேண்டும். அனைத்து வகை பள்ளிகளும், பள்ளி கல்வித்துறையின் கீழ் இணைக்கப்பட வேண்டும். பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.