10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களும் தேர்ச்சி என அரசு அறிவிக்க வேண்டும் என, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா பெருந்தொற்று காரணமாக, 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவர்களின் பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு நடைமுறை தேர்வின் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால், தனித் தேர்வர்களாகப் பதிவு செய்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் தேர்ச்சி அறிவிக்கப்படவில்லை. அதோடு, அவர்களுக்கான தேர்வையும் அக்டோபர் மாதத்தில் அறிவித்திருக்கிறார்கள்.
அக்டோபரில் தேர்வு, பின்னர் நவம்பரில் தேர்ச்சி முடிவுகள் வந்தால், எப்போது அந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வார்கள் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். அதோடு, தனித் தேர்வர்கள் தேர்ச்சிக்கு முறையான மதிப்பீட்டு அணுகுமுறை என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழக அரசு 10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சியை முன்கூட்டியே 'ஆல் பாஸ்' என அறிவித்து, அவர்களுக்கு முறையான மதிப்பெண் வழங்கினால், அந்த மாணவர்களும் கல்லூரியில் சேர வசதியாக இருக்கும். மாணவர்களின் எதிர்கால நலன்கருதி தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.