1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகள் எவை தெரியுமா...?

சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகள் எவை தெரியுமா...?

நீரிழிவு உள்ளவர்கள் எல்லா காய்கறிகளும் சாப்பிடக் கூடாது. அதிலும் குறிப்பாக கிழங்கு வகைகளைப் பொருத்தவரையில் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்தெந்த கிழங்குகளைச் சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்,




சிகப்பு முள்ளங்கி: 
                    சிகப்பு முள்ளங்கியை நிறைய பேர் ஜூஸாகவும் சாலட் போலவும் சாப்பிடுவார்கள். இது மிக வேகமான செரிமானமடையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதில் சர்க்கரைச் சத்தும் மாவுச்சத்தும் அதிகம். உடல் சூடும் இதில் குறையும்.
 
சர்க்கரைவள்ளிக் கிழங்கு: 
                     சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இனிப்புச் சத்து மிக அதிகமாக இருப்பதால் தான் அதற்கு இந்த பெயர் வந்தது. வேகவைத்தும், பொரியல் செய்தும், சாலட் செய்தும் சாப்பிடலாம். உடல் பலம் கூடும். அதேசமயம் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.  வாயுத்தொல்லையும் சிறுநீரகக் கோளாறும் உண்டாகும்.

மரவள்ளிக் கிழங்கு: 
                 மரவள்ளிக்கிழங்கிலும் சர்க்கரை சத்து அதிகமாகவே இருக்கிறது. இந்த கிழங்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். ரத்ததத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
 
வாழைமரக் கிழங்கு:           
                  வாழைத்தண்டையும் தாண்டி, வாழை மரத்தின் அடிப்பகுதியில் சேனைக்கிழங்கைப் போன்று ஒரு கிழங்கு காணப்படும். இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. உடல் சூட்டை தணிக்கும் என்பது உண்மை. ஆனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.
 
கருணைக்கிழங்கு: 
                     கொழுப்புச் சத்து மற்றும் மாவுச்சத்து இரண்டும் அதில் அதிகம் உள்ளதால் உடலில் உள்ள திசுக்களில் கொழுப்புக்கள் படிய ஆரம்பித்து விடும். அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.
 
உருளைக்கிழங்கு: 
                     கொழுப்புச் சத்தும் மாவுச்சத்தும் மிக அதிகமாகக் கொண்ட கிழங்கு வகைகளில் முதன்மையானது இந்த உருளைக்கிழங்கு. இந்த கிழங்கை சாப்பிட்டால் திசுக்களில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags