திருப்பத்தூரில் நடைபெற்ற கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த மாத இறுதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டது உரிய ஆதாரத்துடன் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், வரும் பட்ஜெட்டில் கல்விக்கென புதிய திட்டங்கள் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.