இலவச எல்.கே.ஜி., 5ல் விண்ணப்ப பதிவு
தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி, எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். சிறுபான்மை அந்தஸ்து பெறாத,தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளியிலும், இந்த திட்டம் அமலில் உள்ளது.
அதாவது தனியார் பள்ளிகளில், நுழைவு வகுப்பாக உள்ள எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், அரசின் சார்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு, அரசின் சார்பில் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும்.நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் துவங்கின.
பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கான, 25 சதவீத இடங்களின் பட்டியல், பள்ளி கல்வித் துறையிடம், நேற்று வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல், இன்று இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.வரும், 5ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. இதையொட்டி, விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விபரங்களை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தொடர்பாக, மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப் பட்டு, அவர்களின் மொபைல் போன் எண்கள், rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் தகவல் தேவைப்படுவோர், அந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.