கல் உப்பு தசை வலி மற்றும் தசைப் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. கல் உப்பில் அதிக அளவில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், இது வீக்கத்தை நீக்குகிறது.
வெதுவெதுபான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிப்பதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
ஆமணக்கு எண்ணெய் எலும்புகளில் உண்டாகும் வீக்கம், சுளுக்கு மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெயை சுத்தமான துணியில் ஊற்றி சுளுக்கினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். பின்னர் சூடான நீரில் துணியை நனைத்து சுளுக்கு உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுப்பதும் நன்மை அளிக்கும்.
ஆப்பிள் வினிகரில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
மேலும், இது பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை நீக்குகிறது. வெதுவெதுபான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அந்ந நீரைப் பயன்படுத்தி ஒத்தனம் அளிப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்க இயலும்.
ஆலிவ் எண்ணெயில் வீக்கத்தைக் குறைக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெய் இட்டு லேசாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. மேலும், ஆலிவ் எண்ணெய் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும் கிராம்பு எண்ணெய்யை பற்கள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கவே பயன்படுத்துகின்றனர். எனினும், இதனை சுளுக்கிலிருந்து விடுபடவும் பயன்படுத்தலாம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை தடவி மசாஜ் செய்வது வலியைக் குறைக்க உதவுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.