அரசின் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாத 23 மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்
.தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர மதிப்பெண் தேவை. அதனால், அவர்களுக்கு மட்டும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.இதில் திருப்தி இல்லாதோர்; பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக தேர்வு எழுதும் தனி தேர்வர்கள் ஆகியோருக்கு, வரும் 6ம் தேதி பொது தேர்வு துவங்க உள்ளது. இந்த தேர்வுக்கு 36 ஆயிரம் தனி தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
மேலும், அரசின் விதிப்படி மதிப்பெண் பட்டியல் பெற்ற பள்ளி மாணவர்கள் 23 பேர், மதிப்பெண்ணில் திருப்தி இல்லாததால் பொது தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வில், அவர்கள் எடுக்கும் மதிப்பெண் தான், இறுதி மதிப்பெண்ணாக கணக்கில் எடுக்கப்படும் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதற்கிடையில், அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கும், தனி தேர்வர்களுக்கும், 6ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எழுத விரும்பினால், அனைத்து பாடங்களுக்கும் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும். அதில் எடுக்கும் மதிப்பெண்களே, இறுதி மதிப்பெண்களாக கணக்கில் எடுக்கப்படும்.இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.