தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை உருவாக்கி மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் சூழலை ஏற்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அடுத்த மாதம் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் மக்களுக்கு காணொலி மூலம் அறிவுறுத்தியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் ஆகும். அது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக் கூடும். இதனால் கொரோனாவிற்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்க முடியாது. முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கருதப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது
கடந்த முறை முழு ஊரடங்கின் போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது தளர்வுகள் காரணமாக மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி உள்ளது. மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை சரியாக கடைப்பிக்காததே இதற்கு காரணம். எனவே கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகி விடக் கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் என்பதை கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை மட்டுமில்லாமல் எந்த அலையையும் எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏராளமாக தயார் நிலையில் உள்ளது. ஆனால் மக்களின் அலட்சியம் காரணமாக கொரோனாவை விலை கொடுத்து வாங்க கூடாது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை போல இல்லாமல் மூன்றாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஸ்பானிஷ் காய்ச்சலைப் போல இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்வதை பயமுறுத்தலாக இல்லாமல் நமக்கு தரப்படுகிற எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வோம். ஜிகா வைரஸ், டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று புதிய புதிய படையெடுப்புகள் சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் நாம் வெல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.