இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி: மல்யுத்தம் பைனலில் ரவிக்குமார்
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம், இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை ரவிக்குமார் உறுதி செய்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 12வது நாளான இன்று (ஆக.,04) மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா, கொலம்பியா வீரரை எதிர்கொண்டார். இதில், 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் பல்கேரியா வீரருடன் மோதியதில் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
இதனை தொடர்ந்து நடந்த அரையிறுதி போட்டியில், 57 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில், ரவிக்குமார் தாஹியா, நுரிஸ்லாம் சனாயேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
மல்யுத்தத்தில் 86 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் தீபக் புனியா, நைஜீரிய வீரரை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி எளிதாக காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சீன வீரருடன் மோதிய தீபக் புனியா 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
தொடர்ந்து நடந்த அரையிறுதி போட்டியில், அமெரிக்க வீரர் டேவிட் டெய்லரிடம் 10 - 0 என்ற புள்ளிக்கணக்கில் தீபக் புனியோ தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து அவர் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.