பழைய ரூபாய் நோட்டுகள் வாங்குவதாக மோசடி: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோர் குறித்து சலுகைகள், கமிஷன்களை நம்பி ஏமாற வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீப காலங்களில் பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை, கொடுத்தால் அதிகமான பணம் தருவதாக விளம்பரங்கள் வலம் வருகின்றன. அவ்விளம்பரங்களில் அவர்கள் குறிப்பிடும் எண்கள், குறியடூகளுடன் உள்ள ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களுக்கு கூடுதல் பணம் மற்றும் கமிஷன் தருவதாக கூறுகின்றனர்.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், எந்தவொரு நிறுவனம் அல்லது நபர்களுக்கு இதுபோன்ற பழைய ரூபாய்கள், நாணயங்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் பரிவர்த்தனை செய்வதற்கும் கட்டணம் மற்றும் கமிஷன் வசூல் செய்வதற்கும் யாருக்கும் அனுமதி வழங்கிவில்லை. வங்கிகளின் பெயரை இணைத்து வரும், இதுபோன்ற விளம்பரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.