1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சுக்குட்டிக் கீரையின் (மணத்தக்காளி) மருத்துவ பயன்கள் .

♥ பசிக்கு  உணவு & நோய்க்கு  மருந்து - பாகம் - 24. ♥
♥  சுக்குட்டிக் கீரையின் (மணத்தக்காளி)  மருத்துவ பயன்கள் . ♥

              ♥   விலை குறைந்ததும், அதிக சத்து கொண்டதுமான கீரைகள் தங்கத்திற்கு ஒப்பானவை. 




              ♥   கீரை வகையைச் சேர்ந்த மணத்தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. மிளகு தக்காளி மற்றும் மணல் தக்காளி என்ற பெயர்களால் அழைக்கப்படும் மணத்தக்காளி கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் காணப்படுகின்றன. இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள மணத்தக்காளி இதயத்துக்கு பலம் ஊட்டும் டானிக்காக பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
              ♥   தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன. கரோட்டின்கள், வைட்டமின், குளுக்கோஸ், டோமட்டினால், டைகோஜெனின், சோலமார்ஜைன், பால்மிடிக், சிட்ரிக் அமிலங்கள், சோலனோகேல்ஸைன் போன்ற வேதிப்பொருட்கள் மணத்தக்காளியில் காணப்படுகின்றன.

இதயநோய்க்கு மருந்து:
              ♥   கத்தரி இனத்தைச் சேர்ந்த மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும். இத்தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை. 
              ♥   சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சுப்பை எரிச்சலை அகற்ற வல்லது. 
              ♥   சீதபேதிக்கு மாற்றாகும். 
              ♥   செடியின் சாறு கல்லீரல், கணையத்தின் வீக்கம், மூலநோய், பால்வினைநோய், நீர்க் கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும். 
              ♥   மலர்கள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகும். 
              ♥   கனிகள் இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன. 
              ♥   இலைகள் வீக்கமடைந்த விந்துப்பை வலியை அகற்றவல்லது. 
இலையின் பசை மூட்டு வலிக்கு பற்றாக பயன்படுகிறது. விழிப் படலத்தினை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது.

சுக்குட்டிக் கீரை:
              ♥   கசப்பு சுவையை உடைய இக்கீரை சமைத்த பின்பு கசப்பு தன்மை மாறிவிடும். 
              ♥   சுக்குட்டிக் கீரையை உணவாகச் சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும். 
              ♥   கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. 
              ♥   நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.
              ♥   மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். 
              ♥   உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.

வீக்கங்கள் போக்கும்:
              ♥   உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். 
              ♥   தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். 
              ♥   உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.
              ♥   நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும். 
              ♥   சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். 
              ♥   மணத்தக்காளிப் பழத்தை பேதி மருந்தாக சாப்பிடலாம். 
இக்கீரையில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.             
              ♥   மணத்தக்காளி  செரிமானக் கோளாறுகள் அனைத்தையும் மணத்தக்காளிக் கீரையின் இரசம் குணப்படுத்துகிறது. 
              ♥   கீரையின் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம்.

மஞ்சள் காமலையை குணமாக்கும்:
              ♥   மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. மிக்ஸி மூலம் எடுத்த சாற்றை இவர்கள் அருந்த வேண்டும். 
              ♥   இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.
              ♥   இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். 
              ♥   இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். 
              ♥   வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. 
              ♥   இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

குழந்தை வரம் தரும் மணத்தக்காளி பழம்:
              ♥   மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது. 
              ♥   ஆஸ்துமா நோயாளிகளும்,  காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. 
              ♥   நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.
              ♥   இப்பழம் உடனே கருதரிக்கச் செய்யும். 
              ♥   உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. 
              ♥   புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். 
              ♥   குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். 
              ♥   பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. 
              ♥   ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும். 
              ♥   மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது.               
              ♥   காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags