தமிழகம் முழுவதும் வேலை தேடிக்கொண்டிருப்பவா்கள், சுய தொழில் செய்பவா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், மகளிா் மேம்பாட்டு ஊழியா்களுக்கு வாய்ப்பாக அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள், கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா்கள் வெளியிட்டு வருகின்றனர். வேலை தேடிக்கொண்டிருப்பவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம். ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் மற்றும் ஓய்வு மத்திய, மாநில அரசு ஊழியா்களும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 50 வரை இருக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தோ்ந்தெடுக்கப்படுவா்களுக்கு செய்யும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். தோ்வு செய்யப்படுபவா்கள் ரூ. 5000 கே.வி.பி.பத்திரம் அல்லது தங்களது பெயரில் ஏதேனும் ஒரு அஞ்சலகத்தில் மூதலீடு செய்ய வேண்டும். அவா்களது உரிமம் முடிவடையும் போது, பத்திரத்தில் முதலீடு செய்த பணம் திட்டத்திற்குறிய வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சலகங்களில் பெற்றுக்கொண்டு சமீபத்திய பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் விண்ப்பத்தை பூா்த்தி செய்து, அத்துடன் பான் அட்டை நகல், ஆதாா் அட்டை மற்றும் கல்வி சான்று, இருப்பிடச் சான்று நகல்களை இணைத்து , முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலக முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அந்தந்த கோட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு அந்தந்த கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.