தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிக்க தகுதியான தூத்துக்குடி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிப்பதற்கான தகுதி மற்றும் வயது வரம்பு போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்த மற்றும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்னும் அறிவிப்புக்கான தகுதிகள் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இயக்குனர் ம.பேச்சியம்மன் கூறியதாவது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் அதை புதுப்பித்திருத்தல் வேண்டும்.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு (ஆதிதிராவிடர் , பழங்குடியினர் ) 45 வயதுக்கு மிகாமல் மற்றவர்களுக்கு 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகிறது. விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72,000 க்கு மிகாமல் இருப்பதும் அவசியமாகிறது. தகுதியானவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடி கோரம்பாளையத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கூறிய கூற்றின் படி தகுதியானவர்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், மேல்நிலை கல்வியை முடித்தவர்களுக்கு 400 ரூபாய் மற்றும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வழங்கப்படுகிறது. இவ்வாறு மூன்று ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழங்கப்படும் உதவித்தொகை ஆதாருடன் இணைக்கப்பட்ட நேரடி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.