இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் பல வகையான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் வீடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தவிர வயது முதிர்ந்தவர்களுக்கான சில சேவைகளை வீடு தேடி சென்று கொடுத்து வருகிறது.
இந்நிலையில் டிஜிட்டல் சேவைகளின் போது பயனர்களுக்கு ஏற்படும் சில சிக்கல்களை கருத்தில் கொண்டு அவற்றை தடுக்க பராமரிப்பு பணிகளை செய்ய உள்ளது. இதன் காரணமாக SBI வங்கியின் டிஜிட்டல் சேவைகள் சில மணி நேரங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதாவது SBI வங்கியின் டிஜிட்டல் தளங்களான யோனோ, யோனோ லைட், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் யோனோ பிசினஸ் உள்ளிட்டவை ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை, அதாவது இரவு 11.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.45 மணி வரை நிறுத்தப்படும்.
அதனால் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரங்களில் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாது என்று SBI வங்கி ட்வீட் செய்துள்ளது. அதாவது ஒரு சிறந்த வங்கி அனுபவத்தை வழங்க பாடுபடுவதால் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் எங்களுடன் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது. இது தவிர புதிய வாடிக்கையாளர்களை டிஜிட்டல் மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிம் பைண்டிங் வசதியுடன், YONO மற்றும் YONO Lite சேவைகள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களின் சிம் வைத்திருக்கும் சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் என அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.