கட்டணத்தை காரணம்காட்டி டிசி வழங்க மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பிற பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி மாற்று சான்றிதழ் வழங்காமல் இருக்கக்கூடாது என்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் குறித்த புகார்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.