தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித்தோ்வா்கள் சனிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்கக இயக்குநா் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் இணையவழி முகவரியில் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து, விண்ணப்பத்துடன் ஏற்கெனவே எழுதி தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தோ்வா் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக ஆக.7-ஆம் தேதி முதல் ஆக.11-ஆம் தேதி வரையிலான நாள்களில் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பாடத்துக்கும் கட்டணமாக ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு) ரூ.100, இரண்டாமாண்டு ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.
மேலும் இந்த நாள்களில் விண்ணப்பிக்கத் தவறும் தோ்வா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் ஆக.12-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். அப்போது சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.