கூகுளின் ஜிமெயில் சேவையை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக வங்கி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தேவைகளுக்கு ஜிமெயில் அதிகமாக பயன்படுகிறது என்றே கூறலாம். அதேபோல் இந்த ஜிமெயில் வசதியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதன்படி ஜிமெயில் வசதியில் ஏற்கனவே வெளிவந்த Undo Send எனும் அம்சம் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது முன்பு இந்த ஜிமெயில் பயன்படுத்தி நாம் தவறுதலாக மெசேஜ்களை அனுப்பிவிட்டால் திரும்பப்பெற அல்லது டெலிட் செய்ய முடியாது. ஆனால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அம்சங்கள் மூலம் தவறுதலாக மெசேஜ்களை அனுப்பினால் கூட குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், நீங்கள் ஜிமெயில் வழியாக மெசேஜ் அனுப்பும்போது ஏதேனும் தவறு நடந்துவிட்டால், 5 விநாடிகள் முதல் 30 விநாடிகளுக்குள் அந்த மெசேஜை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதை எப்படி செயல்படுத்துவது
இதோ வழிமுறை
கூகுளின் ஜிமெயிலை ஓபன் செய்து, Settings பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு ஜெனரல் (General) எனும்ஆப்சனை தேர்வுசெய்த பின்பு அதில் இருக்கும் Undo Send என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது ஜிமெயிலில் Undo Send ஆக்டிவேட் ஆகியிருக்கும்.
எனவே நீங்கள் எப்போது மெசேஜ் அனுப்பினாலும் டெஸ்க்டாப்பின் கீழ் வலதுபுறத்தில் Undo ஆப்சன் காண்பிக்கும். அதைப் பயன்படுத்தி நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெசேஜை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.