1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழகத்தின் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி உள்ளன - மத்திய அரசு தகவல்!

தமிழகத்தின் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி உள்ளன - மத்திய அரசு தகவல்


இந்திய அளவில் கல்வியில் பின்தங்கிய அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 4ஆம் இடத்தில் உள்ளது. இங்கே 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என யுஜிசி (UGC) ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்க்கு பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம் பல்கலைக்கழக மானியக் குழுவால் நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் அதிகம் கொண்ட உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகம் இந்திய அளவில் 4 இடத்தில் உள்ளது.

அதன்படி தமிழகத்தில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக யுஜிசி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

இந்திய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை சராசரியில் தமிழகம் 50 சதவிகிதத்துடன் முதலிடம் வகிக்த்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் என மத்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags