தமிழ்நாடு பாட நூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களுக்கு பின்னால் சாதியை குறிக்கும் சொற்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் பெயர்கள் மட்டும் இடம்பெறும் படி புத்தகங்கள் மாற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சாதியை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் படித்த இளைஞர்கள் பெரும்பாலும் சாதியை பொருட்படுத்தவில்லை. இந்த சாதி என்ற சொல்லால் தமிழர்களின் ஒற்றுமை கலைக்கப்படுகிறது. அதனை நீக்கி தமிழர் என்று சொல்வதிலேயே நாம் பெருமை கொள்வோம். தமிழகத்தை தாண்டி நாம் பிற மாநிலங்களுக்கு சென்றால் அனைவரும் நம்மை தமிழன் என்றே அழைப்பர் அங்கு சாதி எடுபடுவதில்லை.
சாதி பெயரை வைத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களும், வன்முறைகளும் அவ்வப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பாரதியார், பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் சாதிகளை வேரோடு அகற்ற அரும்பாடு பட்டவர்கள். ஆனால் தற்போது வரை சாதிகள் ஒழியவில்லை. அதை வைத்து பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இனி வரும் காலங்களில் வரும் இளைய சமுதாயம் சாதி என்பதிலிருந்து விடுபட்டு ஒற்றுமை உணர்வோடு வளரும் நோக்கில் தமிழக அரசு புதிய முயற்சியை கையாண்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு பாடநூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களுக்கு பின்னால் இடம் பெயரும் அவர்களின் சாதியை குறிக்கும் சொற்கள் நீக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பாட நூலில் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் தமிழறிஞர்.உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் பெயரின் பின் இடம்பெற்றுள்ள அய்யர் என்ற சாதியை குறிக்கும் சொல் நீக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பில் அவர் எழுதிய பாட நூலில் அவரின் பெயர் சாதியை குறிப்பிடும் சொல் நீக்கப்பட்டு உ.வே.சாமிநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.