தனியார் பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கை – நாளை கடைசி நாள்!
தனியார் பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கை – நாளை கடைசி நாள்!
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி பயில ராமநாதபுரம் மாவட்டத்தில் மீதமுள்ள இடங்களுக்கு ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் (நாளை) விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில அரசு 25% இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இதற்கான முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கிறது. ஆண்டுதோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் உரிமை பெறுகின்றனர். இந்த கல்வி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவரின் இருப்பிடம், சேர விரும்பும் தனியார் பள்ளிக்கு 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் எனவும், குழந்தையின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி மாணவர்கள் சேர்க்கைக்கு கடந்த மாதம் 5ம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. எல்.கே.ஜி சேரும் மாணவருக்கு 31.07.2021 அன்று 3 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1.12 லட்சம் இடங்கள் உள்ளனர். இதில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,916 சேர்க்கை இடங்கள் உள்ளன.
இதில் நேற்று வரை 700 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள தனியார் பள்ளி இடங்களுக்கு தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் https://rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் நாளைக்குள் (03.08.2021) விண்ணப்பிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
2 comments:
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த ஒருவார காலமாக தரவுதளம் பதிவு மட்டுமே செய்ய முடிகிறது அடுத்த நிலை தொடர முடியவில்லை
ReplyDeleteMay be server slow try night time
ReplyDelete