தமிழகத்தில் அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணித்திறன் உயர்த்தும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சேவை அமைய வேண்டும் என மனிதவள மேலாண்மை துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மாநில முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிய முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இதன் மூலம் மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் மனிதவள மேலாண்மை துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு முதல்வர் தலைமை வகித்தார். அப்போது அவர் அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம், அவர்களது பணித்திறனை மேம்படுத்தி அதன் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும் போட்டித் தேர்வுகளில் நமது மாநில மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறும் வண்ணம் பல்வேறு வகைப்பட்ட சிறப்பு பயிற்சிகளை வடிவமைத்து அரசு பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு மாணவர்களிடையே மாநில மற்றும் ஒன்றிய அரசு பணிகள் தொடர்பான போட்டித் தேர்வுகள் / தகுதிகள் / தேவையான பயிற்சிகள் குறித்த விழுப்புணர்வை முதலில் ஏற்படுத்தவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் மூலம் அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கவும், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தினார். அரசு அலுவலர்களின் மனிதவள ஆற்றலை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பினை பெருக்குவதற்கும் அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளை உயர்த்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
பவானிசாகரில் உள்ள அடிப்படை பயிற்சி மையத்தால் அரசு பணியாளர்களுக்கான பயிற்சியினை காணொளி காட்சி வாயிலாக இணையவழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் முனைவர் வெ இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.