மத்திய அரசை போல, தமிழகத்திலும், 'ஆன்லைன்' வழியில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.
ஆசிரியர் பணியில் சேருவதற்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகள் செல்லத்தக்கதாக இருந்தது. அதன்பின், மீண்டும் தகுதி தேர்வை எழுத வேண்டி இருந்தது.தற்போது, 'ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும்; அந்த சான்றிதழ் ஆயுள் முழுதும் செல்லும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ், ஆயுள் முழுதும் செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், டிசம்பரில் புதிய கல்வி கொள்கைப்படி, ஆசிரியர் தகுதி தேர்வுகளை, ஆன்லைனில் நடத்த தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றி, தமிழகத்திலும் ஆன்லைன் வழியில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு மையம் அமைப்பதற்கு தேவையான கல்லுாரிகளின் பட்டியலை தருமாறு, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் எழுதி உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.