1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சென்னையில் 2015 வெள்ளம் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதா? பொதுமக்கள் கவனம் அரசு என்ன சொல்கிறது

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறித்து வெளியாகும் தகவல்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நிவர் புயலால் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீரின் அளவு 22 அடியை எட்டியுள்ளது.

த்திய ஜல்சக்தி அமைச்சகம் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை 6 மணிக்குள் 15 முதல் 20 செ.மீ. மழை பெய்யும் எனவும், ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவு 7 ஆயிரம் கன அடியாக இருக்கும் என எச்சரித்துள்ளது.

அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து படிப்படியாக 34,500 கன அடி நீர் திறக்க முடியும் எனவும், ஏரியிலிருந்து அடையாறு ஆற்றுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக சென்னை மாநகரமே ஸ்தம்பித்திருக்கிறது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் அங்கங்கே முறிந்து விழுந்துள்ளது. 

சென்னையில் பலத்த காற்ரு வீசுவதால்  முன்னெச்சரிக்கையாக சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு பெருமழையால் வெள்ளம் சூழ்ந்திருந்த சமயத்தில் ஏரியில் இருந்து ஒரே நாளில் 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் சென்னை பலத்த சேதத்தை சந்தித்தது. ஆனால் அமைச்சர் சொல்வது போல் திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியை தாண்டி அதிகரிக்குமா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

தமிழக அரசு ஏரி திறப்பால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளது. தற்போது ஏரிக்கு நீர்வரத்து 4027 கன அடியாக இருக்கும் நிலையில், நீர் வரத்து அதிகரித்தால் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும். எனவே எந்த நேரத்திலும் சூழல் மாறலாம். அதனால் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags