👉 மோர்குழம்பு அவியல் புளிக்காமல் இருக்க அன்றைய தினம் உறைக்கு ஊற்றிய தயிர் அல்லது மோரில் அவியல் செய்தால் சுவையாக கெட்டு போகாமல் இருக்கும்.
👉 வெந்தயக் குழம்பு இறக்கும்போது இரண்டு பொரித்த அப்பளத்தை நொறுக்கிப் போட்டு இறக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.
👉 வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு தணியும்.
👉 கொத்தமல்லி சட்னி மீந்துவிட்டால் மோரில் சட்னியைப் போட்டு கரைத்துவிடுங்கள். மசாலா மோர் போல சுவையாக இருக்கும்.
👉 பருப்பு உருண்டைக் குழம்பு செய்யும்போது சில நேரம் உருண்டை கரைந்து விடும். இதைத் தவிர்க்க அரைத்த உடன் சிறிது எண்ணெய் விட்டு கடாயில் 5 நிமிடம் வதக்கி சிறிது அரிசிமாவு கலந்து உருட்டி குழம்பு கொதிக்கும் போது ஒவ்வொன்றாக போட்டால் கரையாது.
👉 இட்லி பொடியுடன் சிறிது வெந்தயத்தையும் வறுத்து, பொடி செய்து சேர்த்தால், மணமாக இருப்பதுடன் வயிற்றுக் கோளாறுகளுக்கும் நல்லது.
👉 தர்பூசணித் தோலை மெல்லியதாக சீவி எண்ணெயில் பொரித்து மிளகாய் பொடி, உப்பு தூவி சாப்பிடலாம். நடுவிலுள்ள வெண்மை பகுதியை கூட்டு அல்லது அடை, வடையில் துருவிப் போட்டு செய்யலாம்.
👉 குடைமிளகாய், கோவைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றில் பொரியல் செய்யும் போது மசாலா பொடியுடன் நான்கு டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவையும் கலந்து செய்தால் அதிக மொறுமொறுப்புடன் சுவையாக இருக்கும்.
👉 சேப்பங்கிழங்கு, கருணை கிழங்குகளை இட்லி தட்டில் வேக வைத்தால் குழையாமல் இருக்கும்.
👉 சூப் தயாரிக்கும் போது அதில் இரண்டு டீஸ்பூன் பார்லி தண்ணீர் கலந்து பருகினால் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.