சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும்.
மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு, நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.
வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.
இட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால்,சுவை கூடுதலாகும்.
ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.
எதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால், பஜ்ஜி போட காய்கறி இல்லையே என்று கவலைப்படவேண்டாம். பஜ்ஜிக்கான மாவைத் தயாரித்து,அதில் தோலுடனான வறுத்த வேர்க்கடலையை தோய்த்து பஜ்ஜி போடலாம். இது சுலமான பஜ்ஜி. சுவையாகவும் இருக்கும்.
இரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல் பிரச்சினையே வராது.
வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து ஊற்றவும். சுவையும் சத்தும் கூடும்.
வாழைப்பூ அடைக்கு பூவை அப்படியே நறுக்கிப் போடக்கூடாது. வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு வேக வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மாவில் கலந்து அடை செய்யவும். சுவையாக இருக்கும்.
நுங்கை வாங்கி வந்ததும் சிறிது னேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். பிறகு எடுத்து தோலை உரித்தால், எளிதாக வரும். ஜில்லென்று இருக்கும்.
கூட்டு செய்யும்போது, உளுத்டஹ்ம் பருப்பு டஹ்னியா இவைகளை அரைத்து விட நேரம் இல்லையென்றால், பரவாயில்லை. கொஞ்சம் ரசப்பொடியைசேர்த்தால், அரைத்துவிட்ட அதே டேஸ்ட் கிடைக்கும்.
முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி, வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால், சுவையான ‘ கோஸ் துவையல்’ தயார்.
எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன், நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுக் கலக்கவும். பிறகு முழு பழங்களைப் போட்டு மூடி வைத்து விடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு அடியோடு இருக்காது.
கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும்.
இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும். உளுந்துக்கும் இதற்கும் மணம், சுவையில் வேறுபாடு தெரியாது. செலவும் குறைவு.
இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்தை சற்றுக் குறைத்துவிட்டு, இளம் வெண்டைக்காயை நறுக்கிப் போட்டு ஊற வைத்து அரைக்கவும். இட்லி மிருதுவாக வரும்.
எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அத்துடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அள்ளும்.
அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேகுழல், ஓமப்பொடி செய்யும்போது உருளைக் கிழங்கை வேஅக் வைத்து ,மாவுடன் கலந்து பிசைந்தால், சுவை கூடும்.
அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.
பனீர் பொறிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு போட்டு, பொறித்தால், சீராகப் பொறியும். சாதாரணமாகப் பொறிக்கும்போது சில இடங்களில் கருகுவது போல கருகவும் செய்யாது.
காலிஃப்ளவரை ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது, ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கக் கூடாது. அடியில் உள்ள கிடிஸ்டரில் வைக்கலாம். அதிலும் தண்டுப் பகுதி மேற்புறமாக இருக்கும்படி வைத்தால் ஈரம் பூவின் மேல் தாக்காது.
ஜாங்கிரிக்கு நீரில் ஊற வைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பிழிந்தால், உடையாமல் முழுதாக வரும்.
வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தைக் கரையவிட்டு, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால், அப்பம் புஸ்ஸென உப்பி வரும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.