மின் வாரியத்தின் தொலைபேசி எண்களில், 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்டோர், மின் தடை குறித்து புகார் அளிக்க முடியாததால், கூடுதல் வசதியாக, மொபைல் செயலி உள்ளிட்ட மின்னணு சேவைகளை, விரைவாக செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
24 மணி நேரம்சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்போர், மின் தடை தொடர்பாக, மின் வாரியத்தின் கணினி மின் தடை நீக்கும் மையத்தின், '1912' என்ற தொலைபேசி எண்ணில், 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.அங்கு பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மீண்டும், மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.மின் துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் உள்ள குறைதீர் மையம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ள, 'வாட்ஸ் ஆப்' எண்ணிலும் புகார் தரலாம்.நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க, தனி கட்டுப்பாட்டு உதவி மையம் துவக்கப்பட்டது.இதற்காக, ஒவ்வொரு பகுதிக்கும், தனி தொலைபேசி, மொபைல் போன் எண்களை, மின் வாரியம் வழங்கியது.புயல் காரணமாக, தொடர்ந்து பெய்த கன மழையால், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், பல மின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டன.இதனால், ஏற்பட்ட மின் தடையால், பலர் பாதிக்கப்பட்டனர். அவர்கள், மின் தடை புகார் அளிக்க, மின் வாரியத்தின் கணினி மையம், கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டனர்.வலைதளங்களில் புகார்ஒரே சமயத்தில் பலரும், அந்த எண்களை அழைத்ததால், 'பிசி' என்று வந்ததால், புகார் அளிக்க முடியவில்லை.
தங்கள் பகுதி பொறியாளர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள், பணிச்சுமையால், போனை எடுக்க முடியவில்லை. இதனால், தொலைபேசி எண் வழங்கிய நிலையில், மக்கள் புகார் அளிக்க முயற்சித்தும், அனைவரின் புகாரையும், மின் வாரியத்தால் பெற முடியவில்லை.எனவே, ஏற்கனவே அறிவித்த, மொபைல் செயலியில் மின் தடை புகார் பெறும் சேவையை, வாரியம் உடனே செயல்படுத்த வேண்டும்.
மேலும், 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களிலும் புகார் பெறும் வசதியை துவக்க வேண்டும்.அவற்றில் எப்போது வேண்டுமானாலும் புகார் பதிவு செய்யலாம். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் தெரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.